தொடர்புக்கு

ஸ்ரீ நரஸிம்மர் சரணாலயம்

பழனியப்பன் மீனாட்சி இல்லம்
No.23/13, பட்டாபிராமன் தெரு,அருகில் K.M.C.மருத்துவமனை,தென்னூர்,திருச்சி-17.

ஒவ்வொரு புதன்கிழமை 11.30 A.M 5 P.M
3 நாட்களுக்கு முன்பு உங்கள் நியமனம் பதிவு செய்ய வேண்டும்
நியமனம் எண் : 9385682301

குறுஞ்செய்தி அனுப்ப : 9698677711

Note: Only Text message by mentioning name,place & age (or) voice message(below 1 min)can be send
(Normal call or Whats app call not allowed)

மின்னஞ்சல் முகவரி: srimahalakshmidivinekirupa@gmail.com
Background

சுவாதி நக்ஷத்ரா

விக்ஷ்ணு பகவானின் நான்காவது அவதாரம் சிங்க முகமும் மனித உடலும்கொண்ட நரஸிம்மர். பிரகலாதனுக்காக தூணில் தோன்றியவர். பிரம்ம தேவரால் வழங்கப்பட்ட வரத்திற்கு எந்த களங்கமும் ஏற்படாது இரணியகசிப்பு என்ற அரசனை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டியவர்.இந்த நற் தெய்வம் தோன்றியது வைகாசி மாதம் சுவாதி நட்சத்தில் ஆகும். இதுவே நரஸிம்மர் ஜெயந்தியாகக் கொண்டாடப்படுவதுடன், மாதம்தோறும் வருகின்ற சுவாதி நட்சத்திரம் நரஸிம்மரின் பிறந்த தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

நரஸிம்மர் எப்போதும் வலு மற்றும் வெற்றியுடன் தொடர்புபட்டுள்ள தெய்வமாகும். தேவையான நேரத்தில் தனது பக்தர்களைக் காக்கின்ற, அறியாமையைப் போக்குகின்ற தெய்வமாகும்.

சுவாதி நட்சத்திரத்தை அடிப்படையாகக்கொண்டு இந்த ஜென்ம சுப தினம் கணிக்கப்படுகின்றது. இத்தினத்தில் நரஸிம்மர் ஆலையங்களில் அபிஷேகங்கள் இடம்பெறுவதுடன், பிரசாதங்கள் ( சக்கரைப்பொங்கல், தயிர் சாதம், வெண்கொண்டற் கடலை மற்றும் வடை) மற்றும் பானகம் படைத்து வழிபடப்படுகின்றது. பக்தர்கள் தமது வீட்டிலும் பிரசாதங்கள் மற்றும் பானகத்தைப் படைத்து இத்தினத்தைக் கொண்டாட முடியும். இத்தினத்தில் நரஸிம்மப் பெருமானும்,லெக்ஷ்மித் தாயாரும் மனமகிழ்ச்சியுடன் இருக்கும் நாளாகையால் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொடுக்கும் நன்னாளும் இதுவே.

இத்தினத்தில் லெக்ஷ்மி நரஸிம்மரைத் தொழுவோர் பொருளாதார செல்வத்தைப் போதியளவு பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன், உங்களது அனைத்து ஆன்மீக மற்றும் பொருளாதார ஆதாயங்களும் இன்னாளில் நிறைவேற்றிக்கொடுக்கப்படும். பக்தர்களின் கனவுகள் அனைத்தும் நனவாக வேண்டும் என்ற ஆசியை இறைவன் வழங்குகின்ற புனிதமான நாள் இதுவாகும்.

இத்தினத்தை அனுக்ஷ்டித்து பத்தர்கள் அனைவரும் கடன்தொல்லையிலிருந்து, நிதி நெருக்கடியிலிருந்து, உறவுமுறைப் பிரச்சனையிலிருந்து, சட்டப் பிரச்னைகளிலிருந்து விடுபடுங்கள். விபத்துக்களிலிருந்து, நோய்களிலிருந்து, துன்பங்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கக் கூடியவர் லெக்ஷ்மி நரஸிம்மர். பில்லி, சூனியம், ஏவல் மற்றும் எதிரிகளின் பிடியிலிருந்து உங்களைப் பாதுகாக்கக்கூடியவர். இத்தகைய நற்தெய்வம் லெக்ஷ்மி நரஸிம்மரின் அருளைப் பெற்று வாழ்க்கையை ஒளிமயமாக்குங்கள்.

சுவாதி கொண்டாட்டம்
மலேசிய கோவிலில் ஆகஸ்ட் 2018 இல் சுவாதி கொண்டாட்டம்

மலேசிய கோவிலில் ஆகஸ்ட் 2018 இல் சுவாதி கொண்டாட்டம்