தொடர்புக்கு

ஸ்ரீ நரஸிம்மர் சரணாலயம்

பழனியப்பன் மீனாட்சி இல்லம்
No.23/13, பட்டாபிராமன் தெரு,அருகில் K.M.C.மருத்துவமனை,தென்னூர்,திருச்சி-17.

ஒவ்வொரு புதன்கிழமை 11.30 A.M 5 P.M
3 நாட்களுக்கு முன்பு உங்கள் நியமனம் பதிவு செய்ய வேண்டும்
நியமனம் எண் : 9385682301

குறுஞ்செய்தி அனுப்ப : 9698677711

Note: Only Text message by mentioning name,place & age (or) voice message(below 1 min)can be send
(Normal call or Whats app call not allowed)

மின்னஞ்சல் முகவரி: srimahalakshmidivinekirupa@gmail.com
ammavin-parvaiil-aanmigam

இராமலிங்க அடிகளார்

Ramalinga Vallalar

திருவருட் பிரகாச வள்ளலார் என்று அனைவராலும் அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் உள்ள மருதூரில் 05.10.1823ல் இராமையா – சின்னம்மையார் தம்பதிக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார். தில்லையில் இறைவழிபாட்டின் போது விழியசைக்காமல் இறைவனைப் பார்த்துச் சிரித்ததைக் கண்ட ஆலய அந்தணர், இக்குழந்தையை “இறையருள் பெற்ற திருக்குழந்தை” என்று பாராட்டினார்.
இராமலிங்கனார் பிறந்த ஆறாவது திங்களில் தந்தையர் மறைந்தார். குடும்பத்தினர் சென்னைக்குக் குடிபெயர்ந்தனர். இராமலிங்கனாரின் தமையனார் புராணச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதன் மூலம் கிடைத்த வருவாயே குடும்ப வருவாய் ஆயிற்று. இராமலிங்கனாருக்கு ஐந்து வயதானவுடன் கல்வி கற்க அவரை ஆசிரியர் சபாபதியிடம் அனுப்பி வைத்தனர். இராமலிங்கனாருக்கோ படிப்பில் நாட்டமில்லை ஆயினும் ஒன்பது வயதிலேயே பாடல் புனையும் திறன் பெற்றார்.

ஒருநாள் இராமலிங்கனார் புராணச் சொற்பொழிவுகள் கேட்பதற்காக சென்னையிலுள்ள இலிங்கிச் செட்டித் தெருவிற்கு சென்றார். அன்று வர வேண்டிய சொற்பொழிவாளர் இராமலிங்கனாரின் தமையனார் வரவில்லை வெள்ளாடை அணிந்து அழகொழுகும் திருமுகத்துடன் கூடிய ஒன்பது வயது சிறுவனான இராமலிங்கனாரின் தம் அண்ணன் வர இயலாமையைக் கூறி “உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்” என்ற பெரிய புராணப் பாடலைப் பாடி அனைவரது மனத்தையும் கவரும் வண்ணம் நெடுநேரம் அதற்குப் பொருள் கூறினார்.

பொதுமை நெறி:-

வள்ளலார் இறைவன் ஒருவனே; அவன் ஒளி வடிவினன் என்பதையும் அருட்பெருஞ் சோதியாய் விளங்கும் இறைவனை அடைவதற்கு தனிப்பெருங் கருணையே கருவி என்பதையும் உலகோர்க்கு உணர்த்த சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினை வடலூரில் நிறுவினார்.

உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் என்றார் வள்ளலார். அவர் கடவுளின் பெயரால் உயிர்க்கொலை செய்வதை அறவே வெறுத்தார் போரினால் உண்டாகும் கொடுமைகளை அறிந்து வருந்தினார். போரில்லா உலகைப் படைக்க விரும்பினார்.

எவ்வுயிரையும் கொல்லலாகாது. புலால் புசித்தல் கூடாது. எல்லா உயிர்களையும் தம்முயிர் போல் எண்ணுதல் வேண்டும். உலகமக்கள் அனைவரையும் உடன் பிறப்புகளாய் நேசித்தல் வேண்டும் என்பது இச்சங்கத்தின் நோக்கங்களாகும்.

ஆணும் பெண்ணும் சமம் என்று கூறினார். மூடநம்பிக்கைகளாலும் சாதி மத வேடுபாடுகளாலும் மக்கள் துன்புறுவதைக் கண்டு மனம் பதைத்த வள்ளற் பெருமான் “சங்கடம் தீர்க்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன்” என்றார்.

திருவருட்பா

இராமலிங்கனார் அருளிய பாடல்கள் அருட்கருணை நிறைந்தவை. ஆறு தொகுதிகள் 5818 பாடல்கள் கொண்ட இவரது பாடல்கள் திருவருட்பா என மக்கள் போற்றுகின்றனர். இவர் உருவ வழிபாட்டை நீக்கி ஒளி வழிபாட்டை மக்கள் பின்பற்றச் செய்தார். அதற்காகவே வடலூரில் “சத்திய ஞான சபையை” நிறுவினார். மேலும் மக்கள் அறியாமையை நீக்கி அறிவுபெற அங்கே சோதி தரிசனப் புதுமையை புகுத்தினார். இதனால் பாரதியார் இவரை “புதுநெறி கண்ட புலவர்” என்று போற்றுகிறார்.

 தமிழ்பற்று

வள்ளலார் மொழிப்பற்று மிக்கவர் தமிழ்மொழியே இறவாத நிலை தரும் என்று கருதினார். பயில்வதற்கும் அறிவதற்கும் மிகவும் இலேசுடையதாய் பாடுவதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய் சாகாக் கல்வியை மிகவும் எளிமையாக அறிவிப்பதாய் திருவருள் வலத்தால் கிடைத்த தென்மொழி ஒன்றினிடத்தே மனம்பற்றச் செய்து அத்தென் மொழியால் பல்வகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்தருளினீர் என்று உண்மை உரைத்தார். மனுமுறை கண்ட வாசகம் ஜீவகாருண்ய ஒழுக்கம் வடிவுடை மாணிக்கமாலை ஆகியவை இவர் இயற்றிய உரைநடை நூல்களாகும்..

திருவொற்றியூர் சிவன் மீது “எழுத்தறியும் பெருமான் மாலை” மற்றும் சென்னை கந்தகோட்டத்து இறைவனை மனமுருகப் பாடி “தெய்வமணி மாலை” ஆகிய தொகுப்புகளை வெளியிட்டார்.

சின்மயிதீபிகை ஒழிவிலொடுக்கம் தொண்டை மண்டல சதகம் ஆகியவை இவர் புதுப்பித்த நூல்களாகும்.

பசிப்பிணி மருத்துவர் வள்ளலார்

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பயிர்வாடத் தாம் வாடினார். வீடுதோறும் இரந்தும் பசியறாது அயர்ந்தவரையும் நீடிய பிணியால் வருந்துவோரையும் ஈடில் மானிகளாய் ஏழைகளால் நெஞ்சு இளைத்தோரையும் கண்டு வருத்தத்தால் உயிர் இளைத்தார். இவ்வருத்தம் நீங்கவே 1867-ல் வடலூரில் சத்திய தருமச்சாலையை நிறுவினார். சாதி மத வேறுபாடின்றிப் பசித்தோர்க்கெல்லாம் உணவிட்டார். அங்கு அவர் ஏற்றி வைத்த அடுப்பின் கனல் இன்னும் பல்லோர் பசிப்பிணியைப் போக்கி வருகின்றது.

இறைநிலை அடைதல்:

19-ம் நூற்றாண்டைத் தமிழின் மறுமலர்ச்சிக் காலம் என அறிஞர் போற்றுவர். அக்காலத்தே புலவர் பெருமக்களாலும் சமூகச் சீர்த்திருத்தச் செம்மல்களாலும் போற்றப்படும் பெருஞ்சிறப்பினைப் பெற்ற வள்ளலார் 1874ம் ஆண்டு தைப்பூசத் திருளான்று (30.01.1874) இறவாநிலை எய்தினார்.

வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்:
  • தாய் தந்தை மொழியைத் தள்ளி நடக்காதே
  • குருவை வணங்க கூசி நிற்காதே
  • வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
  • மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே
  • நல்லோர் மனத்தை நடுங்கச் செய்யாதே
  • பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே
  • ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே
  • பசித்தோர் முகத்தைப் பாராதிராதே
  • இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே
  • தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே

இராமலிங்க அடிகளார் பற்றி அம்மா பேச்சு