தொடர்புக்கு

ஸ்ரீ நரஸிம்மர் சரணாலயம்

பழனியப்பன் மீனாட்சி இல்லம்
No.23/13, பட்டாபிராமன் தெரு,அருகில் K.M.C.மருத்துவமனை,தென்னூர்,திருச்சி-17.

ஒவ்வொரு புதன்கிழமை 11.30 A.M 5 P.M
3 நாட்களுக்கு முன்பு உங்கள் நியமனம் பதிவு செய்ய வேண்டும்
நியமனம் எண் : 9385682301

குறுஞ்செய்தி அனுப்ப : 9698677711

Note: Only Text message by mentioning name,place & age (or) voice message(below 1 min)can be send
(Normal call or Whats app call not allowed)

மின்னஞ்சல் முகவரி: srimahalakshmidivinekirupa@gmail.com
ammavin-parvaiil-aanmigam

இராகவேந்திரா

Sri Raghavendra Swami

திரு திம்மண்ணா மற்றும் திருமதி கோபிகாம்பாள் எனும் தம்பதியருக்கு புதல்வனாக தமிழகத்தில் உள்ள புவனகிரி (தற்போது சிதம்பரம்) எனும் ஊரில் வியாழக் கிழமை, சுக்கில நவமி, மிருகஷீரிஷ நட்சத்திரத்தில் 1595 ஆம் ஆண்டு பிறந்தவர் வேங்கடநாதன். பின்நாளில் இவர் தான் குரு ஸ்ரீ இராகவேந்திரர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். இராகவேந்திரர் இயற்கையிலேயே நல்ல அறிவும் ஆற்றலும் வாய்ந்து ஆய கலைகளிலும் சிறந்து விளங்கினார். இவர் தந்தையின் இறப்பிற்கு பிறகு கல்வியை தனது தமக்கையின் கணவரிடம் மதுரையில் தங்கி கற்றார். கல்வியை பயின்று மதுரையில் இருந்து தந்து ஊர் திரும்பியவர் 1614-ல் சரஸ்வதி என்பவரை மணம் புரிந்தார். இவர்களுக்கு ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மாச்சார்யா எனும் மகன் பிறந்தார். அதன் பிறகு இவர்கள் கும்பகோணம் குடிபெயர்ந்தார்கள். இராகவேந்திரர் கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் சுவாமிகளிடம் தெய்வத வேதாந்தத்தை பிழையற கற்று சிறந்தார். தான் கற்ற சமஸ்கிருதத்தையும் வேதங்களையும் பிறருக்கு எந்த சன்மானமும் பெறாமல் கற்றுக்கொடுத்தார்.

இவ்வாறு கடவுளை ஆராதிப்பதும், மக்களுக்கு சேவை செய்வதிலுமே கருத்தாய் இருந்த ஸ்ரீ இராகவேந்திரரை, அவரின் குரு ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் சன்யாசம் பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டார். ஆரம்பத்தில் தயங்கியவர், கலைகளுக்கு அதிபதியான கலைவாணியின் ஆசியால் 1621 ஆம் ஆண்டு தஞ்சையில் சன்யாசம் பெற்றார். குரு சுதீந்திரரின் மறைவுக்கு பிறகு அவரின் ஆசிரமத்தை இராகவேந்திரர் தலைமை ஏற்று நடத்தினார்.

தன் அறிவாலும், சக்தியாலும் மக்களுக்கு பல நன்மைகளை புரிந்த ஸ்ரீ இராகவேந்திரர் 1671 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மந்த்ராலயதில் உள்ள ஸ்ரீ இராகவேந்திரரின் பிருந்தாவனத்தில் ஜீவ சமாதி அடைந்தார்.

ஸ்ரீ ராகவேந்திரா பற்றி அம்மா பேச்சு