தொடர்புக்கு

ஸ்ரீ நரஸிம்மர் சரணாலயம்

பழனியப்பன் மீனாட்சி இல்லம்
No.23/13, பட்டாபிராமன் தெரு,அருகில் K.M.C.மருத்துவமனை,தென்னூர்,திருச்சி-17.

ஒவ்வொரு புதன்கிழமை 11.30 A.M 5 P.M
3 நாட்களுக்கு முன்பு உங்கள் நியமனம் பதிவு செய்ய வேண்டும்
நியமனம் எண் : 9385682301

குறுஞ்செய்தி அனுப்ப : 9698677711

Note: Only Text message by mentioning name,place & age (or) voice message(below 1 min)can be send
(Normal call or Whats app call not allowed)

மின்னஞ்சல் முகவரி: srimahalakshmidivinekirupa@gmail.com
ammavin-parvaiil-aanmigam

இராமானுஜர்

Sri Ramanuja

ஶ்ரீ இராமானுஞர், ஶ்ரீ வைஷ்ணவ தத்துவத்தில் மிகவும் மதிக்கப்படத்தக்க ஆசாரியராவார். இவர், தாய் காந்திமதி அவர்களுக்கும், தந்தை ஆசுரி கேஷவ சோமயாயி அவர்களுக்கும் 11 ஆவது நூற்றாண்டில் தமிழ் நாடு சென்னைக்கு அருகே ஶ்ரீபெரும்புத்தூரில் பிராமண குலத்தில் மகனாக 1017 சி.இயில் அவதரித்திருந்தார். இவரது இயற் பெயர் லக்‌ஷ்மணா என்பதுடன், ஒளி பொருந்தியவர் என்பதைக் குறிக்கின்ற இளைய பெருமாருள் என்ற பெயரிலும் இவர் அழைக்கப்பட்டார். பக்தி மார்க்கத்திற்கான இவரது தத்துவம்சார் அடித்தளம் பக்தி இயக்கத்தில் பெரும் செல்வாக்குச் செலுத்தியிருந்தது.

இராமானுஞர் திருமணம் புரிந்து, காஞ்சிபுரத்திற்குச் சென்றிருந்ததுடன், அத்வைத வேதாந்த ஆசிரமத்தில் இவரது முதலாவது குருவான யாதவ பிரகாஷ என்பவரிடம் கல்வி கற்றிருந்தார். அதன் பின்னர்,வேதாந்த சாஸ்திரங்கள், ஆகமங்கள், இதிகாசங்கள், புராணங்கள் மற்றும் திவ்விய பிரபந்தம் போன்றவற்றை பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி மற்றும் வேறு சில ஆசாரியார்களிடமும் கற்றிருந்தார். அதன் பின்னர், தனது திருமண வாழ்க்கையைத் துறந்த இராமானுஞர் இந்து மதத் துறவி ஒருவராக மலர்ந்திருந்தார். இவர், சிறந்ததொரு இந்து தத்துவஞானியாகவும், சிந்தனையாளராகவும் திகழ்ந்திருந்தார்.

மகான் இராமானுஞர், 18 தடவைகள் திருக்கோஷ்டியூர் நம்பி அவர்களிடம் சென்று 18 ஆவது தடவை தான் ஆன்மீக அறிவினைப் பெற்று, இந்த பொருள் பற்று மிக்க உலகத்திலிருந்து ஒவ்வொரு ஜீவனையும் கரையேற்றுவதற்காக ‘’ஓம் நமோ நாராயணாய’’ என்ற திரு மந்திரத்தின் முழுமையான அர்த்தத்தையும், இதனை உச்சரிப்பதனால் வரக்கூடிய பலன்களை யும் சாதாரண மக்களுக்கும் வெளிப்படுத்தியவராவார்.

இராமானுஞர், தனது இறுதி நாட்களைச் ஶ்ரீரங்கத்தில் செலவிட்டிருந்தார். இந்தப் பூமியில் 120 ஆண்டுகள் வாழ்ந்த இராமானுஞர் 1137 ஆம் ஆண்டில் முத்தி அடைந்தார். இராமானுஞர் ஜெயந்தி சித்தரை மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகின்றது.

ஶ்ரீ இராமானுஜர் பற்றி அம்மா பேச்சு